சரஸ்வதி, மதுரை – செல்லூர், தமிழ்நாடு – இந்தியா
எங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது அங்கு வந்த நண்பர் ஒருவர் RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தியுங்கள் என்று கூறினார். நேரில் அவர்களின் அலுவலகம் சென்று சந்தித்தோம். திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி இருவரும் நேரில் வந்து எங்களது வீட்டை ஆராய்ந்து பார்த்து வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வழி காட்டினார்கள். மேலும் ஒரு முக்கியமான யாரும் கண்டுபிடிக்காத ஒரு தீய ஆவி இருப்பதை கண்டுபிடித்து அதனை வெளியேற்ற வழியும் கூறினார்கள். பக்கத்து வீட்டில் திருமணமாகி குழந்தை பெற்ற பெண் தீக்குளித்து இறந்தார், அந்த ஆவி தான் என்று கூறினார்கள். பத்து - பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அதை சரியாக கூறினார்கள். தற்போது அவர்கள் சொன்னபடி அனைத்தையும் சரி செய்து நாங்கள் இன்று நன்றாக இருக்கின்றோம். வியாபரமும் நன்றாக நடக்கின்றது. மேலும் எங்களின் குழந்தைகள் முன்பை விட தற்பொழுது நன்றாக படிக்கின்றார்கள்.
RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி
RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)
2020-02-13T16:20:23+05:30
https://rknastrovastu.com/testimonials/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/