குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்

Guru Rahu Ketu Adject

குரு :

சித்திரை மீ 9 உ (22-04-2019) திங்கட்கிழமை இரவு 1.10 மணிக்கு சூர்ய உதயாதி 48.04 நாழிகை அளவில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான் வக்ர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குத் திரும்புகிறார்.rahu-kethu-transitஐப்பசி மீ 18 உ (4-11-2019) திங்கட்கிழமை மறுநாள் விடியற்காலை 5.17 மணிக்கு சூர்ய உதயாதி 57.56 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார்.
பங்குனி மீ 16 உ (29-03-2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 3.54 மணிக்கு சூர்ய உதயாதி 54.19 நாழிகை அளவில் குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.

சனி :

rahu-kethu-transitதை மீ 10 உ (24-01-2020) வெள்ளிக்கிழமை காலை 9.57 மணிக்கு சூர்ய உதயாதி 8.13 நாழிகை அளவில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.

வாக்கியப்படி குரு :

வைகாசி மீ 4 உ (18-05-2019) சனிக்கிழமை 31.01 நாழிகை அளவில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான் வக்ர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குத் திரும்புகிறார்.
ஐப்பசி மீ 11 உ (28-10-2019) திங்கட்கிழமை 5.14 நாழிகை அளவில் குரு பகவான் நேர் கதியில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார்.
rahu-kethu-transitபங்குனி மீ 14 உ (27-03-2020) வெள்ளிக்கிழமை 55.09 நாழிகை அளவில் குரு பகவான் அதிசாரமாகத் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.
(இவ்வருடம் திருக்கணிதப்படி ராகு-கேது பெயர்ச்சியும் வாக்கியப்படி சனிப் பெயர்ச்சியும் ராகு-கேது பெயர்ச்சியும் கிடையாது).

அனுபவங்கள்

 • சரஸ்வதி, மதுரை - செல்லூர், தமிழ்நாடு - இந்தியா on வாஸ்து: “எங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது…
 • உமா விமலன், ஸ்ரீ உமா வித்யாலயா, மதுரை - தமிழ்நாடு - இந்தியா on வாஸ்து: “வணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து…
 • P. புருசோத்தமன், தலைமை ஆசிரியர் மங்கையற்கரசி மேல் நிலை பள்ளி, மதுரை - தமிழ்நாடு - இந்தியா on வாஸ்து: “RKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து…
வாஸ்து பற்றிய வசாகர் கருத்துக்களை தெரிந்து கொள்ள

பல்லி விழும் பலன்

பல்லி விழும் பலன் - Lizard-worth-fall

தலையில் – கலகம், குடுமி – சுகம், கூந்தல் – லாபம், முகம் – பந்து தரிசனம், சிரசு – கெண்டம், நெற்றி – பட்டாபிஷேகம், வலப்புருவம்இடப்புருவம் – ராஜானுக்கிரகம், வலது இடது புருவ மத்தியில் – புதல்வர் நாசம், வலது கபாலம் – சம்பத்து,  இடது கபாலம் – அன்பு, வலக்கண் – சுபம், இடக்கண் – கட்டுப்படுதல், மூக்கு – வியாதி, மூக்கு நுனி – விசனம்,  மேல்உதடு – பொருள் நாசம், கீழ்உதடு – தனலாபம், மோவாய்க்கட்டை – ராஜதண்டனை, வாய் – பயம், வலது காது – தீர்க்காயுசு,  இடது காது – வியாபாரம், கழுத்து – சத்ரு நாசம், வலது புஜம் – ஆரோக்யம், இடது புஜம் – ஸ்தீரி சுகம், வலக்கை – துக்கம், இடக்கை – துயரம், வலது மணிக்கட்டு – பீடை, இடது மணிக்கட்டு – கீர்த்தி, வலது கை விரல் – ராஜ சன்மானம், இடக்கை விரல் – துயரம், மார்பு – தனலாபம், வலது இடது ஸ்தானங்கள் – பாப சம்பவம், இருதயம் – சௌக்கியம், தேகம் – தீர்க்காயுசு, வலது விலா எலும்பு – வாழ்வு, இடது விலா எலும்பு – கெண்டம், வயிறு – தான்ய லாபம், நாபி – ரத்தின லாபம், உபய பாரிசம் – லாபகரம் அடைதல், முதுகில் – நாசம், ஆண்குறி – தரித்திரம், வலது இடது அபானம் – தனமுண்டு, வலது இடது தொடைகள் – பிதா அரிஷ்டம், வலது இடது முழங்கால்கள் – சுபம், வலது இடது கணுக்கால்கள் – சுபம், வலது இடது பாதங்கள் – பிராயணம், வலது பாதம் – ரோகம், இடது பாதம் – துக்கம், பிருஷ்டம்  – சுபம், வலது பாத விரல்கள் – ராஜ பயம், இடது பாத விரல்கள் – நோய், வலது இடது கால் விரல் நகங்கள் – தனநாசம் , தேகத்தில் ஓடல் – தீர்க்காயுசு.

தோஷ பரிகாரம் :

தோஷமுள்ள இடங்களில் பல்லி விழுந்தால் உடனே தலைக்கு குளித்து விட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கவும். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தங்க, வெள்ளி பல்லியை நினைத்து கொள்வது உத்தமம்.

அனுபவங்கள்

 • சரஸ்வதி, மதுரை - செல்லூர், தமிழ்நாடு - இந்தியா on வாஸ்து: “எங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது…
 • உமா விமலன், ஸ்ரீ உமா வித்யாலயா, மதுரை - தமிழ்நாடு - இந்தியா on வாஸ்து: “வணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து…
 • P. புருசோத்தமன், தலைமை ஆசிரியர் மங்கையற்கரசி மேல் நிலை பள்ளி, மதுரை - தமிழ்நாடு - இந்தியா on வாஸ்து: “RKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து…
வாஸ்து பற்றிய வசாகர் கருத்துக்களை மேலும் தெரிந்து கொள்ள

தாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்

ramar jathagam - horoscope Prediction

ஒரு மானுட கர்மாவிற்கு, அதன் கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள் பன்னிரு இராசிகளில் நிற்கும் கிரகங்களின் நிலையை பொறுத்தே அமைகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இந்த கிரகங்களே எந்த ஒரு நிகழ்வையும் தீர்மானிக்கின்றன.

முக்கியமாக ஜெனன இயல்பு, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், புத்திர பாக்யம், ஆரோக்கியம், பொருளாதார நிலை, குடும்பத்தாரின் நிலை, சுகம், சந்தோஷம், துக்கம், வெளிநாட்டு வேலை, வாகனம், சொத்து, உடன் பிறந்தோர், தாய், தகப்பன், மூதாதையர்கள், பூர்வீகம், குலதெய்வத்தின் அருள், குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம், பூர்வீகச்சொத்து என அனைத்திற்கும் பன்னிரு பாவகங்களையும், அதில் நிற்கும் கிரகங்களின் நிலை வைத்து பலன்கள் தெளிவாக கூறப்படும்.

ஒருவருடைய ஜாதகம் மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பின் அந்த ஜாதகருக்கு கொடுக்கும் பலன்கள் மிகச் சரியானதாக இருக்கும்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

 • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
 • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
 • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

[email protected]

புதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்

விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் கோள்கள் பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக் கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.

ஜோதி என்றால் ஒளி என்று பொருள். ஒளிரும் முதன்மைக் கோளான சூரியனிடமிருந்தும், நட்சத்திரங்களிடமிருந்தும் வெளிப்படும் ஒளி அலைகள் பிற கோள்கள் மீது பட்டு பிரதிபலிக்கும் பொழுது அந்த கோள்களின் தன்மைகளையும் கலந்து பிரதிபலிகின்றன. அந்த ஒளி அலைகள் பூமியில் வசிக்கும் உயிரினங்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்களை அறிந்து கொள்ள வானியல் கலையான ஜோதிடக்கலை நமக்கு உதவுகின்றது.

ஒரு குழந்தை பிறக்கும் நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே ஜெனன ஜாதகம் கணிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கும் அந்த நாட்டின் நேரப்படியும் அந்நாட்டில் அந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்பின்படி ஜாதகம் கணித்து கொடுக்கப்படும். இருளில் நிற்பவர்களுக்கு ஒளிகாட்டும் கலையாக ஜோதிடக்கலை விளங்குகின்றது.

கீழ்கண்ட விவரங்களை தெளிவாக அனுப்பவும்.

 1. குழந்தை பிறந்த தேதி , நேரம் (பகல் /இரவு).
 2. பிறந்த ஊர்.
 3. தாய் தகப்பன் பெயர் ஊர்.

[email protected]

ராசிக்கல் அதிர்ஷ்ட கல்

Rasikkal-Zodiac-Lucky-Stone

இரத்தினங்கள்

மாணிக்கம் – Ruby
முத்து – Pearl
மரகதப்பச்சை – Emerald
வைரம் – Diamond
பவளம் – Coral
மஞ்சள் புஷ்பராகம் – Yellow Sapphire Topaz

நீலம் – Blue Sapphire
கோமேதகம் – Gomed Hessonite
வைடூரியம் – Cat’s Eye

உபரத்தினங்கள்

டோபாஸ், டர்க்காயில், அகேட், அமிதிஸ்ட், அக்குவாமரின், பெரில், கார்னீலியன், கார்னட், ஜிர்கான், ஓனிக்ஸ், ஜெடு, அம்பர், மூன்ஸ்டோன், டைகர்ஸ்ஐ, பிளட் ஸ்டோன், குவார்ட்ஸ், ஓப்பல், ஜாஸ்பர், லபிஸ் லசுலி, பெரிடோட், ஜெட் போன்ற ரத்தினங்கள் உள்ளன.

அவரவருக்கான அதிர்ஷ்டகல்லினை தேர்ந்தெடுத்து எந்த விரலில் அணிய வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறுகிறோம்.

ஜெம் கற்கள் :

ஜெம் கற்களின் சக்திகளைப் பற்றி நமது மகான்களும், ரிஷிகளும் புராணங்களில் கூறியிருக்கிறார்கள்.
எப்படி ஒரு பெரிய கட்டிடம் கட்டி அதில் இடி தாங்கியை பொருத்தி ஆபத்து வராமல் தடுக்கப்படுகிறதோ அதே போல ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க நாம் தகுந்த ஜெம் கற்களை அணிய வேண்டும்.
Rasikkal-Zodiac-Lucky-Stoneஜெம் கற்களை மோதிரமாகவோ அல்லது டாலராகவோ செய்து அணிந்து கொண்டால் வரவிருக்கும் பல பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மனித சரீரத்தில் மின்காந்த அலைகள் சூட்சம சரீரமாக உடலுக்கு வெளியே இருந்து பாதுகாத்து வருகின்றன. அதே போல ஜெம் கற்களும் மின்காந்த அலைகளைப் பரப்பி வருவதால் சுலபமாக அதன் சக்திகளை ஆபரணமாக அணிவதன் மூலமும் ஜெம் கற்களை அருகில் வைத்திருப்பதன் மூலமும் பிரபஞ்ச சக்திகளை அடையலாம்.
உயர்ந்த ஞானத்தை அடையவும், தாந்தீரிக சக்திகளைப் பெறவும், அதன் நோய் தீர்க்கும் குணங்களுக்காகவும், உடல் உறுப்புகளைப் பலப் படுத்துவதற்காகவும், வியாபார தொழில் விருத்திக்காகவும், தேவையான பண வசதிகளைப் பெறவும் பல வகையில் ஜெம் கற்களை பயன்படுத்தலாம்.
அவரவர் ஜெனன ஜாதக அமைப்புபடி என்ன ஜெம் கற்களை அணிந்தால் நன்மை என்று ஆய்வு செய்து கூறப்படும். தேவைப்படுவோர் எங்களிடமே ஜெம் கற்களை வாங்கி பயனடையலாம்.

ஜோதிட சாஸ்திரத்திற்கும் ரத்தின கற்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து நல்ல பலன் தரக்கூடிய கோள்களின் ரத்தினத்தை அணிவது சிறப்பு.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

 • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
 • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
 • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

[email protected]

வீடு சொத்து வாகனம்

அனைவருக்கும் சொந்த வீடு, சொகுசு கார், சொத்து, ஆபரணங்கள் வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவார்கள்.

இப்படி எல்லோர்க்கும் அமைவது கஷ்டம், பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பார் ஆனால் அவரால் சொந்த வீடு வாங்கி வசிக்க மாட்டார். சொந்த கார் வைத்திருப்பார் ஆனால் அவர் அந்த வாகனத்தில் சென்று சுகப்பட மாட்டார். இப்படி ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு அமைப்பு உண்டு. ஓரு சிலர் அதிகப்படியான வீடு கட்டி வாடகைக்கு விட்டிருப்பார்.

வீடு கட்டும் யோகம் நன்றாக இருந்து வாஸ்து அமைப்பின்படி வீடு கட்டி வாழ்பவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.
வாஸ்து குறைபாடு உள்ள வீட்டில் வசிப்பவர்கள் மன அமைதி பாதிக்கப்பட்டு, பொருளாதார சீர்கேட்டுக்கு ஆளாகி, நோய் தாக்குதல், விபத்து போன்றவற்றிற்கு ஆளாகி சிரமப்படுகிறார்கள். வாஸ்து குறைபாட்டை சரி செய்தால் சுகமாக வாழலாம்.

ஜெனன ஜாதக அமைப்பின்படி எந்த நேரம் வீடு, வாகனம், சொத்து வாங்கும் யோகம் இருக்கிறது, தடைகள் இருந்தால் தடைகள் அகல எளிய பரிகாரங்கள் மூலம் தடைகள் நீங்க வழி கூறப்படும்.

பாதியில் கட்டி நின்ற வீட்டிற்கும் பரிகாரம் , வாஸ்து பார்த்து சரி செய்யலாம்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

 • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
 • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
 • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

[email protected]

கோர்ட் வழக்கு வெற்றி

எந்த ஓரு பிரச்சனையையும் பேசித் தீர்க்கலாம். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.

“மனமிருந்தால் மார்க்கம் உண்டு”

ஆனால் இன்று சிறிய பிரச்சனை என்றாலும் கௌரவத்திற்காக காவல்துறை, நீதிமன்றம், அடிதடி என்று சென்று விடுகிறார்கள். சொத்து பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகள் மூலம் நிறைய பேர் வழக்குகளில் மாட்டிக் கொண்டு மன அமைதியையும், பொருளாதாரத்தையும் இழக்கின்றார்கள்.

அவரவர் ஜெனன ஜாதகத்தின் மூலமும், பிரசன்னத்தின் மூலமும், வழக்கு வெற்றி பெறுமா என்பதனையும், வெற்றி பெற உண்டான எளிய பரிகார வழிகளையும் கூறுகின்றோம்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

 • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
 • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
 • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

[email protected]

கடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு

இன்றைய கால கட்டத்தில் ஏதாவது ஓரு வழியில் பெரும்பாலனோர் கடன் பெற்று விடுகிறார்கள்.
சிலர் தகுதிக்கு மீறி கடன் பெற்று வட்டி மேல் வட்டி கட்டி மீளமுடியாமல் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றார்கள். சிலர் குடும்பம் நடத்தவே கடன் வாங்கி கஷ்டப்படுகிறார்கள். கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் – இலங்கை வேந்தன் -என கம்பர் இராமயணத்தில் உவமையாக கூறியிருக்கிறார்.

ஓருவர் எப்போதும் கடனாளியாக இருப்பது இல்லை, சூழ்நிலை கடனாளியாக்கி விடுகின்றது. ஓரு சிலர் வசதி இருந்தாலும் ஏதாவது கடன் வாங்கியிருப்பார்கள். அவரவர் ஜெனன ஜாதகத்தில் கடன் பற்றிய பிரச்சனையும், தீர்வும் ஆய்வு செய்து பலன் கொடுக்கப்படும்.

மேலும் எதிரிகள் தரும் தொல்லையால் பலர் மன அமைதியிழந்து இருப்பார்கள், இவர்களுக்கும் ஜெனன ஜாதகத்தினை ஆய்வு செய்து பரிகாரம் தீர்வு கூறப்படும். ஜெனன ஜாதகத்தின் அடிப்படையிலும், கோட்சார கிரகங்களின் சஞ்சாரத்தினாலும் ஏற்படும் ஓரு சில நோய்களை கண்டறிந்து அதற்கான எளிய முறையில்  பரிகாரத் தீர்வு கூறப்படும்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

 • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
 • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
 • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

[email protected]

புத்திர பாக்கியம் தடை ,தாமதம்

குழலினிது யாழினிது என்பர் – மக்கள்தம்
மழலைச் சொல் கேளாதவர்

புத்திரம் இல்லாதவன் “புத்” என்ற நரகத்தில் விழுவான் என்பது தர்ம சாஸ்திரம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் பலர் உள்ளனர். குழந்தை பெற்றால் தான் ஓரு பெண் முழுமையடைகிறாள். தன் வம்சம் தளைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதருடைய ஆசையும் ஆர்வமுமாக இருக்கும்.
இருப்பினும் பல்வேறு காரணங்களால் பல தம்பதியினருக்கு புத்திர பாக்யம் கிட்டுவதில்லை. புத்திர சந்தானம், புத்திர பாக்யம், புத்திர பேறு, புத்திர பிராப்தி போன்ற வம்ச வாரிசுக்குண்டான ஆண் சந்ததி பற்றி ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அளவு கடந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எந்த ஜாதகத்திலும் “ பூர்வ புண்ணிய பலன்” நன்றாக இருக்க வேண்டும். இந்த பூர்வ புண்ணிய பலன் இருந்தால் தான் புத்திர பலன் இருக்கும்.

ஓரு சிலருக்கு காலாகாலத்தில் புத்திர பேறு ஏற்பட்டு விடுகிறது. சிலருக்கு காலங்கடந்து ஏற்படுகிறது. சிலருக்கும் புத்திர பேறு இல்லை.

தங்களின் ஜெனன ஜாதகம் கொண்டு இவற்றினை அறிந்து பரிகாரம் தேவைப்பட்டால் கூறப்படும்.

பரிகாரம் தேவைப்பட்டால் எளிய முறையில் தாங்களே கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்து கொள்ளுமாறு கூறப்படும்.

தத்துபுத்திரன்

ஜாதக அமைப்புபடி புத்திர பாக்கியம் இல்லாத நபருக்கு தத்துபுத்திரத்திற்கான அமைப்பு உள்ளதா என்பதனை தங்களின் ஜெனன ஜாதகம் மற்றும் பிரசன்னம் மூலம் பார்த்து கூறப்படும்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

 • கணவன்  , மனைவி இருவர் ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் தெளிவாக அனுப்பவும்.
 • திருமணம் ஆன தேதி, நேரம், ஊர் இவைகளை அனுப்பவும்.
 • ஜாதகம் இல்லையென்றால் போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டுக்கொள்ளவும்.

[email protected]

காதல் வெற்றி

காதல், காதல் திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதரணமான விஷயம் ஆகி விட்டது. காதலில் வெற்றி பெற்று திருமணமாகி சந்தோஷமாக வாழ்க்கை நடத்துபவர்கள் பலர், அதே போல் காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் சிலர், காதல் தோல்வியாகி திருமணமே வேண்டாம் என்று இருப்பவர் சிலர் இப்படி பலதரப்பட்டவர்கள் உள்ளனர்.

காதல் வெற்றியாகுமா, திருமணம் நடக்குமா அல்லது எதிர்ப்பு வருமா, யாரால் எதிர்ப்பு வரும் என்பதனையும், பலருக்கு இன்றைய காலகட்டத்தில் தாய், தகப்பனே முன்னின்று காதல் திருமணம் செய்து வைக்கின்றார்கள். இந்த யோகம் யாருக்கு அமையும் என்பதனையும், பரிகாரம் தேவைப்பட்டால் எளிய முறை பரிகாரமும் ஜெனன ஜாதக அமைப்பின்படி ஆய்வு செய்து கூறப்படும்.