ஒரு மானுட கர்மாவிற்கு, அதன் கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள் பன்னிரு இராசிகளில் நிற்கும் கிரகங்களின் நிலையை பொறுத்தே அமைகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இந்த கிரகங்களே எந்த ஒரு நிகழ்வையும் தீர்மானிக்கின்றன.
முக்கியமாக ஜெனன இயல்பு, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், புத்திர பாக்யம், ஆரோக்கியம், பொருளாதார நிலை, குடும்பத்தாரின் நிலை, சுகம், சந்தோஷம், துக்கம், வெளிநாட்டு வேலை, வாகனம், சொத்து, உடன் பிறந்தோர், தாய், தகப்பன், மூதாதையர்கள், பூர்வீகம், குலதெய்வத்தின் அருள், குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம், பூர்வீகச்சொத்து என அனைத்திற்கும் பன்னிரு பாவகங்களையும், அதில் நிற்கும் கிரகங்களின் நிலை வைத்து பலன்கள் தெளிவாக கூறப்படும்.

ஒருவருடைய ஜாதகம் மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பின் அந்த ஜாதகருக்கு கொடுக்கும் பலன்கள் மிகச் சரியானதாக இருக்கும்.
கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
- பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்
maneesmdu63@gmail.com




விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் கோள்கள் பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக் கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.
ஒரு குழந்தை பிறக்கும் நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே ஜெனன ஜாதகம் கணிக்கப்படுகின்றது.

அனைவருக்கும் சொந்த வீடு, சொகுசு கார், சொத்து, ஆபரணங்கள் வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவார்கள்.
வீடு கட்டும் யோகம் நன்றாக இருந்து வாஸ்து அமைப்பின்படி வீடு கட்டி வாழ்பவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.

எந்த ஓரு பிரச்சனையையும் பேசித் தீர்க்கலாம். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.


இன்றைய கால கட்டத்தில் ஏதாவது ஓரு வழியில் பெரும்பாலனோர் கடன் பெற்று விடுகிறார்கள்.
மேலும் எதிரிகள் தரும் தொல்லையால் பலர் மன அமைதியிழந்து இருப்பார்கள், இவர்களுக்கும் ஜெனன ஜாதகத்தினை ஆய்வு செய்து பரிகாரம் தீர்வு கூறப்படும். ஜெனன ஜாதகத்தின் அடிப்படையிலும், கோட்சார கிரகங்களின் சஞ்சாரத்தினாலும் ஏற்படும் ஓரு சில நோய்களை கண்டறிந்து அதற்கான எளிய முறையில் பரிகாரத் தீர்வு கூறப்படும்.




புத்திரம் இல்லாதவன் “புத்” என்ற நரகத்தில் விழுவான் என்பது தர்ம சாஸ்திரம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் பலர் உள்ளனர். குழந்தை பெற்றால் தான் ஓரு பெண் முழுமையடைகிறாள். தன் வம்சம் தளைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதருடைய ஆசையும் ஆர்வமுமாக இருக்கும்.
தங்களின் ஜெனன ஜாதகம் கொண்டு இவற்றினை அறிந்து பரிகாரம் தேவைப்பட்டால் கூறப்படும்.

காதல், காதல் திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதரணமான விஷயம் ஆகி விட்டது. காதலில் வெற்றி பெற்று திருமணமாகி சந்தோஷமாக வாழ்க்கை நடத்துபவர்கள் பலர், அதே போல் காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் சிலர், காதல் தோல்வியாகி திருமணமே வேண்டாம் என்று இருப்பவர் சிலர் இப்படி பலதரப்பட்டவர்கள் உள்ளனர்.







முதல் திருமணம் விரைவில் பருவ வயதில் நடந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், கோட்ச்சார கிரக சஞ்சாரங்களாலும், ஜெனன ஜாதக அமைப்பின் படியும் முதல் களத்திரத்தை இழந்திருப்பார்கள், அவர்கள் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியம் பிடிக்காத குறையாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.



ஒவ்வொரு ஆணும், பெண்ணும் பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று, தாம்பதியம் என்னும் சம்சார சாகரத்தில் மூழ்கி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள்.
இது போன்ற திருமணம் தடை தாமதத்திற்கு என்ன காரணம் என்று அவர்களின் ஜெனன ஜாதகத்தின் மூலம் ஆய்வு செய்து என்ன தோஷங்கள் உள்ளன என்றும் அதற்கு என்ன எளிய முறை பரிகாரம் என்றும் கூறப்படும்.


You must be logged in to post a comment.