எங்களை பற்றி
நாங்கள் ஒன்பது ஆண்டு காலமாக ஜோதிடம், வாஸ்து துறையில் பல நல்ல சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு செய்து வருகின்றோம். இந்த ஆண்டு 10வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம்.
ஜோதிடத்தில் வாக்கியம் மற்றும் திருகணித முறைப்படி தங்கள் விருப்பத்திற்கேற்ப ஜாதகம் எழுதி சரியான பலன்களுடன் கொடுத்து கொண்டிருக்கிறோம். ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் அதற்கான பரிகாரங்களை எளிய முறையில் தாங்களே கோவில்களில் சென்று செய்து கொள்ளும் வகையில் கூறி தங்களின் நல்வாழ்விற்கு வழி காட்டுவோம்.
அனேக வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பலனடைந்திருக்கிறார்கள். மேலும் திருமணத் தடை, தாமதம் ஆவதன் காரணம் அறிந்து அதற்கான பரிகாரங்கள் கொடுத்திருக்கின்றோம். அதனை நம்பிக்கை உடன் செய்தவர்கள் அனைவரும் தடை நீங்கி திருமணம் ஆகி சந்தோஷமாக இருக்கின்றார்கள்.
எண் கணித ஜோதிட அடிப்படையில் பெயர் அமைத்தும் அவர்களின் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வழிமுறைகளை கொடுத்து அவர்களின் நல்வாழ்விற்கு வழி காண்பித்திருக்கிறோம்.
சிறந்த முறையில் வாஸ்து பார்த்து கொடுத்து கொண்டிருக்கின்றோம். தங்களின் இடத்தை நேரில் ஆய்வு செய்தும், கட்டிட வரை படத்திலும், வாஸ்து படி சரியான முறையில் அமைப்பதற்கான வழிகளை காண்பித்து அதன்படி அமைத்த பின் மீண்டும் ஆய்வு செய்து அவர்களின் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டி உள்ளோம். வாஸ்துவின் மூலம் எங்களிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன் பெற்று சந்தோஷமாக இருக்கின்றார்கள்.
தாங்களும் எங்களின் சேவையை பயன்படுத்தி வாழ்க்கையில் சந்தோஷத்தையும் வளத்தையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எங்களுடைய வழிமுறைகள்/கொள்கைகள்
1. நேரில் ஜாதகம் பார்க்க வருபவர்கள் முன்பதிவு செய்து வரவும்.
2. போன் மூலம் ஜாதக பலன் கேட்க நினைப்பவர்கள் முன்பதிவு செய்து கொண்டு பேசலாம்.
3. ஜாதகம் வைத்திருப்பவர்கள் ஸ்கேன் செய்து எங்களுடைய மெயில் முகவரிக்கு அனுப்பவும்.
4. புதிதாக ஜாதகம் எழுதி பலன் கூற விரும்புபவர்கள் தங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம், பிறந்த இடம், தகப்பனார் பெயர், தாயார் பெயர், ஊர் இவைகளைத் தர வேண்டும்.
5. வாஸ்துவிற்கு போனில் தொடர்பு கொண்டு தேதி கேட்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
6. ஜாதக பலன்கள் தங்களுக்கு தங்களின் மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.
7. பணம் செலுத்திய பின்பு பலன்கள் அனுப்பப்படும்.
8. குல தெய்வம் பற்றிய கேள்விக்கும் பதில் கூறப்படும்