வாஸ்து
வாஸ்து என்பது பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றை ஆதாரமாய் கொண்டது. ஆனாலும் இது பூமியை மையமாக வைத்தே கண்டுபிடிக்கப்பட்ட “மண் சாஸ்திரம்” என்றே கூறலாம். வான்வெளியையும், அங்குள்ள சூரியனையும், சந்திரனையும், எண்ணற்ற கோள்களையும், நட்சத்திரங்களைப் பற்றி நம் முன்னோர்கள் நமக்கு தந்த அற்புதக்கலை சோதிடக்கலை.
சோதிடக்கலையில் எண்ணற்ற உட்பிரிவுகள் இருந்தாலும் கூட அதில் பிரதானமாக் கூறப்படும் அற்புதசாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம். இக்கலையை பயன்படுத்தி அமையப்பெற்ற வீடுகளில் வசிப்போர் ஏழு தலைமுறைகளை தாண்டி வளமாக, பலமாக, வசதியாக வாழ்வதைக் காணலாம்.
வீடே பிரதானம் வேண்டும் சுகபோகம்
வீடே தருமாதி மேலளிக்கும் – வீடே
வளியாதி தோடம் அற வாழ்விக்கும் வீடே
களியாதியைத் தருமே காண்
-சிற்ப ரத்னாகரம்
ஒரு மனிதன் வாழ்ந்திட வீடே பிரதானமாய் இருக்கிறது. அப்படிப்பட்ட வீடு அவனுக்கு வேண்டுகின்ற சுகபோகத்தைத் தர வேண்டும். ஆதியிலிருந்தே நன்மைகளைத் தருவதுடன் மேலும் மேலும் அவனுக்கு நன்மைகளைத் தருகிறது.
அப்படிப்பட்ட வீடுகளே அவனுக்கு வரக்கூடிய, காற்றினால் பரவக்கூடிய நோய்களைத் தடுத்து நோயற்ற நல்வாழ்வு தந்து, இன்பம் நிறைந்ததோர் வாழ்வை அளிக்கும் என்றே மேற்கண்ட பாடல் கூறுகிறது. மனிதனின் வாழ்வின் முக்கிய அம்சமான வீடும் அதன் அமைப்பையும், சுற்றியுள்ள சாலைகளும், வீட்டின் வெளியே உள்ள மற்ற அமைப்புகளால் ஏற்படும் சாதக, பாதகங்களை பற்றி அலசுவதும், அதற்கு தீர்வு காண்பதும் வருமுன்பே நம்மைக் காக்க இந்த சாஸ்திரம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.
வீடு, கடை, தொழில், ஸ்தாபனங்கள், அலுவலக அறை, தொழிற்சாலைகள், வளாகங்கள் ,கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் வாஸ்து பார்க்கப்படும்
-
வரைபடத்தின் மூலம் குறைகளை சரி செய்து தருதல்.
-
தங்களின் இடத்துக்கு நேரில் வந்து சரியான முறையில் ஆய்வு செய்து வாஸ்து முறைப்படி சரி செய்தல்.
-
பழைய கட்டிடங்களுக்கும் வாஸ்து பார்த்து குறைகளை நீக்க வழி காண்பிக்கப்படும்
கட்டணம் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்
- கட்டணம் போனில்/மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளவும்.
[email protected]/+91-9360512079/+91-9344617089
5 Comments
எங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது அங்கு வந்த நண்பர் ஒருவர் RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தியுங்கள் என்று கூறினார். நேரில் அவர்களின் அலுவலகம் சென்று சந்தித்தோம். திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி இருவரும் நேரில் வந்து எங்களது வீட்டை ஆராய்ந்து பார்த்து வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வழி காட்டினார்கள். மேலும் ஒரு முக்கியமான யாரும் கண்டுபிடிக்காத ஒரு தீய ஆவி இருப்பதை கண்டுபிடித்து அதனை வெளியேற்ற வழியும் கூறினார்கள். பக்கத்து வீட்டில் திருமணமாகி குழந்தை பெற்ற பெண் தீக்குளித்து இறந்தார், அந்த ஆவி தான் என்று கூறினார்கள். பத்து – பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அதை சரியாக கூறினார்கள். தற்போது அவர்கள் சொன்னபடி அனைத்தையும் சரி செய்து நாங்கள் இன்று நன்றாக இருக்கின்றோம். வியாபரமும் நன்றாக நடக்கின்றது. மேலும் எங்களின் குழந்தைகள் முன்பை விட தற்பொழுது நன்றாக படிக்கின்றார்கள்.
RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி
வணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து தேவையான மாறுதல்களை செய்ய சொன்னார்கள். எளிமையாகவும் அதிகம் செலவில்லாமலும் மாறுதல் செய்ய வழிகள் கூறினார்கள். மேலும் எங்களுக்கு ராசியான கலரில் பெயிண்டிங் பண்ண வழி காட்டினார்கள். அதன்படி செய்து 60 நாட்களுக்குள் நல்ல வளர்ச்சியும், மனநிம்மதியும் அடைந்தோம்.RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி அவர்களின் அணுகுமுறையும் அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியதும் மிகவும் சிறப்பு.
RKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து கூறி அதற்கான மாற்றங்களையும் கூறினார்கள். மேலும் புதிதாக கட்ட இருந்த கட்டிடத்திற்கான வரை படத்தினை ஆய்வு செய்து வாஸ்து முறைப்படி வரைபடத்தில் சரி செய்து அதன் படி கட்ட வழி கூறி கட்டிடத்தினையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து வழிகாட்டினார்கள். அவர்களின் சேவை எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.
எங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை பாருங்கள், மிகவும் நன்றாக பார்த்து தேவையான வழிமுறை கூறுவார்கள் என்று கூறினார்கள். அதன் படி திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை அணுகினோம். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து சரியான முறையில் ஆய்வு செய்து வீட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டி அதன் விளைவுகளை எடுத்து கூறினார்கள். மாறுதல்களை அவரே படம் போட்டு கொடுத்தார்கள் .அதன் படி மாற்றம் செய்து 60 நாட்களுக்குள் நாங்கள் வளமாக நலமாக இருக்கின்றோம். இன்று எங்களது வீடு லட்சமிகரமாக உள்ளது RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
எங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல் பல நாள் விஷயங்கள் கூறியதுக்கு நன்றி வணக்கம்.
Comments are closed.