புதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்

விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் கோள்கள் பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக் கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.

ஜோதி என்றால் ஒளி என்று பொருள். ஒளிரும் முதன்மைக் கோளான சூரியனிடமிருந்தும், நட்சத்திரங்களிடமிருந்தும் வெளிப்படும் ஒளி அலைகள் பிற கோள்கள் மீது பட்டு பிரதிபலிக்கும் பொழுது அந்த கோள்களின் தன்மைகளையும் கலந்து பிரதிபலிகின்றன. அந்த ஒளி அலைகள் பூமியில் வசிக்கும் உயிரினங்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்களை அறிந்து கொள்ள வானியல் கலையான ஜோதிடக்கலை நமக்கு உதவுகின்றது.

ஒரு குழந்தை பிறக்கும் நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே ஜெனன ஜாதகம் கணிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கும் அந்த நாட்டின் நேரப்படியும் அந்நாட்டில் அந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்பின்படி ஜாதகம் கணித்து கொடுக்கப்படும். இருளில் நிற்பவர்களுக்கு ஒளிகாட்டும் கலையாக ஜோதிடக்கலை விளங்குகின்றது.

கீழ்கண்ட விவரங்களை தெளிவாக அனுப்பவும்.

  1. குழந்தை பிறந்த தேதி , நேரம் (பகல் /இரவு).
  2. பிறந்த ஊர்.
  3. தாய் தகப்பன் பெயர் ஊர்.

[email protected]