குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்

Guru Rahu Ketu Adject

குரு :
சித்திரை மீ 9 உ (22-04-2019) திங்கட்கிழமை இரவு 1.10 மணிக்கு சூர்ய உதயாதி 48.04 நாழிகை அளவில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான் வக்ர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குத் திரும்புகிறார்.ஐப்பசி மீ 18 உ (4-11-2019) திங்கட்கிழமை மறுநாள் விடியற்காலை 5.17 மணிக்கு சூர்ய உதயாதி 57.56 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார்.

பங்குனி மீ 16 உ (29-03-2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 3.54 மணிக்கு சூர்ய உதயாதி 54.19 நாழிகை அளவில் குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.

சனி :

தை மீ 10 உ (24-01-2020) வெள்ளிக்கிழமை காலை 9.57 மணிக்கு சூர்ய உதயாதி 8.13 நாழிகை அளவில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.

 

வாக்கியப்படி குரு :
வைகாசி மீ 4 உ (18-05-2019) சனிக்கிழமை 31.01 நாழிகை அளவில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான் வக்ர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குத் திரும்புகிறார்.
ஐப்பசி மீ 11 உ (28-10-2019) திங்கட்கிழமை 5.14 நாழிகை அளவில் குரு பகவான் நேர் கதியில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார்.

பங்குனி மீ 14 உ (27-03-2020) வெள்ளிக்கிழமை 55.09 நாழிகை அளவில் குரு பகவான் அதிசாரமாகத் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.

(இவ்வருடம் திருக்கணிதப்படி ராகு-கேது பெயர்ச்சியும் வாக்கியப்படி சனிப் பெயர்ச்சியும் ராகு-கேது பெயர்ச்சியும் கிடையாது).

தொடர்புடைய பதிவுகள் :